இந்த உலகின் அடிப்படையான தேவைகளில் மின்சாரம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கிறது. மின்சாரம் ஒரு நாள் இல்லை என்றாலும், மனிதர்களின் இயக்கமே ஸ்தம்பித்துவிடும்.

அப்படிப்பட்ட மின்சாரத்தை எந்த நாடு அதிக அளவு உற்பத்தி செய்கிறது மற்றும் அதிகம் பயன்படுத்துகிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.


உலகிலேயே அதிகளவில் மின்னுற்பத்தி செய்யும் நாடாக சீனா இருக்கிறது.

கடந்த 2020 ல், 75,03,400 ஜிகா வாட் மின்னுற்பத்தியை அந்நாடு பதிவு செய்துள்ளது.

இதில் அதிகளவிலான மின்சாரம் நிலக்கரி மூலமே பெறப்படுகிறது.


அதிகளவிலான பயன்பாட்டிலும் சீனாவே முதல் நாடாக உள்ளது.

மேலே குறிப்பிட்டுள்ள சுமார் 75 லட்சம் ஜிகா வாட் மின்னுற்பத்தியை (99% ற்கும் மேல்) அந்நாட்டின் பயன்பாட்டிற்கே செலவாகிவிடுகிறது.

இந்த உற்பத்தி மற்றும் பயன்பாடு என இரண்டிலும் அடுத்தடுத்த இடங்களில் முறையே அமெரிக்கா மற்றும் இந்தியா உள்ளன.


மேலும் செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க Maya Loham சேனலை SUBSCRIBE செய்யுங்கள்