எல்லா சுபகாரியங்களிலும் மாவிலைகள் தவறாமல் இடம் பெற்றிருப்பதை நாம் பார்த்திருப்போம்.
சுப காரியங்களுக்கு மட்டுமல்ல பொதுவாக எல்லா நாட்களிலும் மாவிலை தோரணம் கட்டலாம்.


மாவிலை தோரணம் தினமும் கட்டி தொங்க விடுவதால் ஏராளமான நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன. மாவிலை கிடைப்பது என்பது அரிதான காரியம் அல்ல. 

வீட்டில் மாவிலைத் தோரணம் கட்டுவதால் மூலம் கண்ணுக்கு தெரியாத நுண்கிருமிகளை அழிக்கிறது. அது போல் பிராண வாயுவை அதிகரிக்கும் ஆற்றல் மாவிலைக்கு உண்டு.

மாவிலை பாசிடிவ் பாக்டீரியாக்களை உற்பத்தி செய்கிற ஆற்றல் கொண்டதால் தீமை விளைவிளைவிக்கும் பாக்டீரியாக்களில் இருந்து நம் வீட்டை பாதுகாக்கிறது.

மாவிலையில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். அது கெட்ட சக்திகளை வீட்டுக்குள் விடாமல் விரட்டி நல்ல பலன்களைக் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.