இந்த உலகில் இயற்கையாகவே பல வினோதங்கள் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. இற்கையாகவே ஒரு கண் மட்டுமே கொண்ட உயிரினம் இந்த உலகத்தில் வாழ்கிறது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?. ஒற்றை கண் கொண்ட உயிரினத்தை பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்..
கோபேபாட்ஸ்
கோபேபாட்ஸ் என்ற இனத்தைச் சேர்ந்த உயிரினம் ஒரு கண்ணுடன் வாழ்ந்து வருகிறது.
கோபேபாட்கள் ஒரு அரிசியை விட சிறியவையாக காணப்படுகிறது.
உலகெங்கிலும் உள்ள கடல்களிலும் ஏரிகளிலும் நீருக்கடியில் வாழக்கூடியவை. இந்த உயிரினம் சிறிய உடலமைப்பையும், நீண்ட ஆண்டெனாக்கள் மற்றும் ஒரு கண் மட்டுமே கொண்டவை."
அவற்றின் கண் ஒரு சராசரி கண்ணாக இருந்தாலும், அது அவற்றின் தலையின் மேற்புறத்தில் அமைந்துள்ளது.
இந்த உயிரினத்தின் கண் சிறியதாக இருந்தாலும், நீருக்குள் செல்லும்போது ஒளிக்கும் இருட்டிற்கும் உள்ள வேறுபாடுகளைக் காண உதவுகிறது.

0 Comments
கருத்துரையிடுக