செங்கிஸ்கான் உலகின் தலைசிறந்த மற்றும் மிகவும் பிரபலமான ஆட்சியாளர்களில் ஒருவர். வரலாற்றின் ஒரு கட்டத்தில், கிழக்கில் பசிபிக் பெருங்கடலில் இருந்து மேற்கில் கிழக்கு ஐரோப்பா வரை பரந்து விரிந்திருந்த பேரரசு. இவரின் மங்கோலியப் படைகள் மத்திய ஆசியா முழுவதையும் தாக்கி கொள்ளையடித்தன, இவரின் படைகள் யாராலும் தடுக்க முடியாததாக இருந்தது.


செங்கிஸ்கான் சாதாரண குடும்பத்தில் பிறந்து அடிமையாக வளர்ந்தவர், வரலாற்றின் மிகவும் வலிமையான படையை உருவாக்கி கிட்டதட்ட பாதி உலகத்தை தனது ஆட்சியின் கீழ் கொண்டுவந்தார். ஆனால் அதற்காக இவர்கள் செய்த பல இரக்கமற்ற செயல்கள் இவரை வரலாற்றின் கொடூரமான ஆட்சியாளர்களில் ஒருவராக மாற்றியது. உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் செங்கிஸ்கான் பற்றிய சில உண்மைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.


செங்கிஸ்கான் 1162 ஆம் ஆண்டில் டெமுஜின் என்ற பெயரில் பிறந்தார். 
செங்கிஸ்கான் குழந்தை பருவத்தில் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அவருக்கு ஒன்பது வயதாக இருந்தபோது அவரது தந்தை விஷம் வைத்து கொல்லப்பட்டார். எந்த ஆதரவும் இல்லாமல் ஏழு குழந்தைகளை தனியாக வளர்க்க முடியாமல் அவரது தாய் விட்டு சென்று விட்டார். அவர் தன் குழந்தைப் பருவத்தில் பிழைப்புக்காக வேட்டையாடினார் மேலும் அவர் தனது சொந்த சகோதரனை உணவுப் பிரச்சினையில் கொன்றதாக சில செய்திகள் உள்ளன. செங்கிஸ்கான் ஒரு சிறந்த ஆட்சியாளராக மாறுவதற்கு முன்பு அடிமைத்தனத்தையும் பல கஷ்டங்களைச் சந்தித்தார், மேலும் அவரது பெரும் துணிச்சலானது இந்த ஏற்ற தாழ்வுகளில் பலவற்றைக் கண்டது. 1206 ஆம் ஆண்டு பழங்குடி மங்கோலியர்களின் தலைவராக அறிவிக்கப்பட்டார். அப்போது அவருக்கு செங்கிஸ்கான் என்ற பிரபலமான பெயரால் அழைக்கப்பட்டார். 'கான்' என்பது 'ஆட்சியாளர்' அல்லது 'தலைவர்' என்று பொருள்படும். அவர் ஆட்சிக்கு வந்த பிறகு, அவர் மற்ற பழங்குடியினருடன் கூட்டணி அமைத்து தனது பேரரசை உருவாக்கத் தொடங்கினார். 1206 ஆம் ஆண்டில் அவர் ஒரு திறமையான தலைவராக தன்னை உறுதிப்படுத்திக் கொண்டார், மேலும் அவரது வெற்றிகள் தொடர்ந்தன.


கோடிக்கணக்கான மக்களின் மரணத்திற்கு காரணமாக இருந்தார் செங்கிஸ் கான், எத்தனை இறப்புகளுக்குக் காரணமானவர் என்பதைக் கண்டறிவது மிகவும் கடினம், ஆனால் சில வரலாற்றாசிரியர்கள் சுமார் 40 மில்லியன் மக்கள் அல்லது ஈரானின் இன்றைய மக்கள்தொகையில் முக்கால்வாசி பேர் என்று கூறுகின்றனர். இந்த மரணங்களில் பலவும் போரின் போது நிகழ்ந்தன. இந்த இறப்பு எண்ணிக்கை உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 11 சதவிகிதம் குறைத்திருக்கலாம் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.


பெரும்பாலான போர்களில் அவரின் படைபலம் குறைவாகவே இருந்தது, ஆனால் அவர் பயன்படுத்திய பல்வேறு இராணுவ உத்திகளின் காரணமாக அவர் தனது எதிரிகளை தோற்கடிக்க முடிந்தது. அவர் தனது படைவீரர்களுக்குத் தேவையான அனைத்தையும் வளங்களை வழங்கியதால் அவர் தனது அனைத்து போர்களிலும் வெற்றி பெற்றார். 

பல ஆண்களுக்கு பிறகும் செங்கிஸ் கானின் நேரடி வழித்தோன்றல்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். டிஎன்ஏ ஆராய்ச்சியின் சமீபத்திய கண்டுபிடிப்பு, மத்திய ஆசியாவில் மட்டும் 16 மில்லியன் ஆண்கள் அவரது சந்ததியினர் என்று மதிப்பிடுகிறது. மங்கோலியப் படைகள் கைப்பற்றிய நகரங்களின் மிக அழகான பெண்கள் அவருக்கு வழங்கப்பட்டது. ஆசியா மற்றும் ரஷ்யாவின் சில ஆளும் வம்சங்களும் அவரது வழித்தோன்றல்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. 


செங்கிஸ்கானுக்கு 500க்கும் மேற்பட்ட மனைவிகள் இருந்தனர். அதில் 6 பேர் மட்டுமே மங்கோலியர்களாக இருந்தனர். மற்றவர்கள் எதிரி நாட்டு மன்னர்களின் மனைவிகளாகவும், மகள்களாகவும் இருந்தனர். இருப்பினும், அவரின் முதன்மையான மனைவியாக போர்டே இருந்தார். அவருக்கு பிறந்தவர்களே மங்கோலிய ராஜ்ஜியத்தின் வாரிசாக கருதப்பட்டனர்.


செங்கிஸ்கானின் மாபெரும் ஆட்சி எப்போது, எப்படி முடிவுக்கு வந்தது என்பது ஒரு மர்மமாகவே உள்ளது. ஒரு சில ஆதாரங்கள் அவர் 1227 இல் குதிரையில் இருந்து விழுந்து இறந்ததாகக் கூறுகின்றனர், மற்ற ஆதாரங்கள் உண்மையை மறுக்கின்றன. அவரது மரணம் மலேரியாவால் ஏற்பட்டதாக ஒரு ஆதாரம் கூறுகிறது, மேலும் அவரது மரணத்தைச் சுற்றியுள்ள யூக விளையாட்டு இன்றுவரை தொடர்கிறது. அவரது கல்லறை மங்கோலிய மலைக்கு அருகில் உள்ளது, ஆனால் கல்வெட்டு எதுவும் இல்லை.