தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வருபவர் சமந்தா. விஜயுடன் தெறி, கத்தி ஆகிய படங்களில் நடித்தார்.
தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு அவரிடமிருந்து பிரிந்துவிட்டார்.
விக்னேஷ் சிவன் நடிப்பில் அவர் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகியோரோடு இணைந்து அவர் நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிடுவது, தோழிகளுடன் சுற்றுலா செல்வது என ஜாலியாக பொழுதை போக்கி வருகிறார். இந்நிலையில், அசத்தலான கவர்ச்சியில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை திணறடித்துள்ளார்.




0 Comments
கருத்துரையிடுக