கனடாவில் 30 ஆண்டுகள் கழித்து வழக்கு ஒன்றில் மத போதகரும், ஒரு பெண்ணும் சிக்கியுள்ளனர்.

அதன்படி 1987ல் இருந்து 1990ஆம் ஆண்டு வரையில் அப்போது 13ல் இருந்து 17 வயது வரை கொண்ட இரண்டு சிறுமிகள் யார்க்கில் உள்ள தேவாலயத்திற்கு அடிக்கடி வந்திருக்கின்றனர்.

அப்போது அவர்களிடம் Raymond Swash என்ற மத போதகரும் Sandra Swash என்ற பெண்ணும் அத்துமீறி தவறாக நடந்திருக்கின்றனர். இதில் பாதிக்கப்பட்ட பெண் சமீபத்தில் தான் இது குறித்து புகார் கொடுத்தார்.


இதையடுத்து ஜூன் மாதம் தான் இது தொடர்பான வழக்கு விசாரணை தொடங்கியது. விசாரணைக்கு பின்னர் கடந்த 12ஆம் திகதி தான் Raymond மற்றும் Sandra ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டனர்.

இதுவரையில் இருவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. இவர்களால் மேலும் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் தங்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என பொலிசார் கூறியுள்ளார். 

- Maya Loham