நடிகர் கமல்ஹாசன் (Kamal Hassan) நடிப்பில் வெளியான வசூல்ராஜா திரைப்படத்தில் நாம் கேள்விபட்ட கட்டிப்புடி வைத்தியம் தற்போது நிஜத்தில் வணிக ரீதியாக களம் இறங்கியுள்ளது. பிரித்தானியாவில் கட்டிபிடி வைத்தியம் மூலம் நபர் ஒருவர் பெரியளவில் பணம் சம்பாதித்து வருவது தெரியவந்துள்ளது.
Embrace Connections என்ற சேவை நிறுவனம் மூலம் cuddle therapy எனப்படும் கட்டிபிடி வைத்தியத்தை ட்ரீவர் ஹூடன் என்பவர் செய்து வருகிறார்.
இதன் கட்டிபுடி வைத்தியத்திற்க்கு ( சுமார் 1 மணி நேரம்) 75 பவுண்டுகள் அதாவது இந்திய மதிப்பில் ரூ 32,021 வசூலிக்கப்படுகிறது. அதாவது பலரும் பெரிய தொகையாக கருதும் பணத்தை ஒரு மணி நேரத்திற்க்கு cuddle therapy செய்பவர் வாங்குகிறார்.
இதில் வாடிக்கையாளர்களுக்கு அரவணைப்பு சிகிச்சை, இணைப்பு பயிற்சி மற்றும் மசாஜ்களை போன்ற வசதிகளையும் வழங்குகிறது. ட்ரீவர் கூறுகையில், விரக்தியடைந்தவர்களை கட்டிபிடிப்பதன் மூலம் நேர்மறை உணர்வுகளை அவர்களுக்கு கொடுக்க முடியும் என்கிறார்.
இது வெறும் அரவணைப்பைக் காட்டிலும், மக்களுக்குத் தேவையான நேர்மறை எண்ணம் மற்றும் அமைதியை கொடுக்கிறது. மனித தொடர்புகளை வளர்ப்பதில் எனது ஆர்வத்தின் அடிப்படையில் இந்த therapy-ஐ நான் உருவாக்கினேன் என கூறியுள்ளார்.
0 Comments
கருத்துரையிடுக