முடி வளரவில்லை என்று கவலைப்படுபவர்களை உலலெங்கிலும் நாம் கேள்விப்பட்டிருப்போம்.
ஆனால், நேபாள நாட்டை சேர்ந்த தேஷாந்த் அதிகாரி என்ற 16 வயது இளைஞருக்கு அடி முதுகில் வால் போல் முடி வளர்ந்துள்ளது. முடி வளர்வதை பிறந்ததும் அறிந்த பெற்றோர்கள் பல மருத்துவரிடம் காண்பித்துள்ளனர். அதனால் எந்த பயனும் அவருக்கு ஏற்படவில்லை. அந்த சிறுவன் வளர வளர இதனை ஒரு அவமானமாக கருதி பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார். அதனை தொடர்ந்து அவர்கள் மருத்துவர்களிடம் அழைத்து சென்றுள்ளனர். பல மருத்துவர்களை பார்த்த பிறகும் என்னவென்றே தெரியாததால் வெளிநாடுகளுக்கு கூட அழைத்து சென்று காண்பித்துள்ளனர்.
ஏதேதோ மருந்துகள் எடுத்துக்கொண்டாலும் முடி வளர்வதை நிறுத்தவில்லை. அதனை தொடர்ந்து அவர்களது ஊரில் உள்ள ஒரு சாமியாரை சென்று சந்தித்துள்ளனர். இதனிடையே அவருக்கு வளரும் முடி குறித்த டிக்டாக் வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது, இதுகுறித்து பேசிய தேஷாந்த், "எனது வீடியோ டிக்டாக்கில் வந்ததில் இருந்து பலரும் என்னை 'வால் உள்ள பையன்' என்று அறிந்துகொள்கின்றனர், நான் பலருக்கும் தெரிந்த மனிதனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்", என்று கூறுகிறார்.
அந்த வால் தற்போது வளர்ந்து 70 செ.மி. ஆக உள்ளது." என்று குறிப்பிட்டார்.

0 Comments
கருத்துரையிடுக