தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தியில் ஆகிய மொழிகளில் 260 க்கும் மேற்பட்ட சினிமாவில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளவர் நடிகை ரம்யா கிருஷ்ணன் (Ramya Krishnan).


இவர் நடித்த பல கதாப்பாத்திரங்களும் மக்கள் மனதில் பதியும் அளவிற்கு நடித்திருப்பார். படையப்பா திரைப்படத்தில் நீலாம்பரி என்ற கதாபத்திரத்தில் வில்லியாக நடித்திருப்பார், இது அவருக்கு திருப்பு முனையாக அமைந்தது.


இந்த நிலையில் அவர் வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. படையப்பா திரைப்படத்தில் அவர் சொன்ன டயலாக் தற்போது அவருக்கே பொருந்தி உள்ளது என ரசிகர்கள் கூறி வருகின்றனர். (வயசானலும் உன் ஸ்டைலும் அழகும் மாறவே இல்ல)