வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகள் நமது வீட்டின் ஒரு அங்கத்தினர் போல் ஆகி விடுகிறது என்றால் மிகையில்லை. அதில் நாய்களும் பூனைகளும் முதலிடம் வகிக்கின்றன.
Viral Video of a Cat: விலங்குகள், குறிப்பாக வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகள் தினம் தினம் மனிதர்களை பரவசத்துக்கு ஆளாக்குபவை. எப்போதும் நமக்கு ஆச்சர்யங்களையும், ஆனந்த அதிர்ச்சிகளையும் அள்ளிக் கொடுக்க வல்லன. அதிலும் வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகள் நமது வீட்டின் ஒரு அங்கத்தினர் போல் ஆகி விடுகிறது என்றால் மிகையில்லை. அதில் நாய்களும் பூனைகளும் முதலிடம் வகிக்கின்றன. வீட்டில் வளர்க்கும் போது அவை வீட்டில் ஒருவராகவே வளரும். செல்ல பிராணிகள் செய்யும் குறும்புகள், செயல்கள் எல்லாமே ரசிக்கும்படி இருப்பவை.
மிகவும் சூட்டிகையான பூனை ஒன்று, செய்யும் வேலை தான் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது வைரலாகி வரும் பூனை வீடியோவில், மூன்று பூனைகளின் மீது லேசர் ஒளி படும் படி ஒரு மனிதன் விளையாடுவதைக் காணலாம். மூன்று பூனைகளும் விளையாட்டுத்தனமாக லேசர் ஒளியைப் பிடிக்க முயலுவதையும் காணலாம். அதில் ஒரு பூனை மட்டும், மிகவும் ஆர்வமாக, லேசர் ஒளியை பிடிக்க, ஒளியை தொடர்ந்து தருணத்தில், அதைப் பின் தொடர்ந்து எந்த சிரமமும் இல்லாமல் சுவரின் மீது ஏறிச் செல்கிறது. இருப்பினும், மற்ற இரண்டு பூனைகளும், இது எப்படி சாத்தியம் என சந்தேகத்துடன் பூனையைப் பார்த்துக் கொண்டிருந்தன. மிக உயரமான சுவரில், பூனை மிக லாவகமாக ஏறுவதையும், வைரலாகும் இன்ஸ்டாகிராம் வீடியோவில் காணலாம். பூனை அதிக உயரம் தாண்டி குதிப்பதையும் லாவகமாக உயரம் தாண்டுவதையும் பலர் பார்த்திருப்பார்கள். ஆனால், செங்குட்த்ஹான சுவரில் பூனை ஏறுவது உண்மையில் ஆச்சர்யத்தை அளிக்கிறது.
பூனைகளும் மிகவும் புத்திசாலியான உயிரினங்கள். பூனைகள் உண்மையில் மனிதர்களுடன் பேசுகின்றன என்கின்றனர் விலங்குகளின் நடத்தை குறித்த நிபுணர்கள். அவை தனக்கு தெரிந்த வழியில் பேசுகின்றன, உணர்ச்சிகளை பகிர்ந்து கொள்கின்றன என்றும் கூறுகின்றனர். இந்த வைரல் வீடியோ @why we should have cat_ என்ற ட்விட்டர் கணக்கில் பகிரப் பட்டுள்ளது. இந்த வீடியோ சுமார் பல மில்லியன் பார்வைகளையும் பல ஆயிரம் லைக்குகளையும் பெற்றுள்ளது.

0 Comments
கருத்துரையிடுக