ஹேர் டை செய்வது இன்று பலரும் செய்யக்கூடிய ஒன்றாகும், வெள்ளைமுடியை மறைப்பதற்காக மட்டுமல்லாமல் தற்போது இளம் தலைமுறையினர் தங்களுக்கு வேண்டியது நிறத்தில் தங்களது முடியை காட்டிக்கொள்வதற்காகவும் விதவிதமான ஹேர் கலர்களை செய்கின்றனர். இதற்கு பார்லர்களில் அதிக செலவும் செய்கின்றனர். 

ஹேர் டை செய்வதால் உண்டாகும் ஆபத்துகள் பற்றி இந்த பகுதியில் காணலாம்.

ஹேர் டை செய்வதும், ஹேர் கலர் செய்வதும் வேறுபட்டவை இல்லை. இரண்டும் ஒன்று தான். இதனால் உண்டாகும் விளைவுகள் ஒரே மாதிரியானவை தான். ஹேர் கலரிங்கில் உங்களுக்கு தேவையான வண்ணத்தை தேர்ந்தெடுத்துக்கொள்கிறீர்கள் அது தான் வித்தியாசம்.

முதலில் ஹேர் டை தயாரிக்க குறைந்த அளவு கெமிக்கல்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது ஹேர்டைகளில் அதிக கெமிக்கல்கள் உள்ளன. இவற்றை தொடர்ந்து உபயோகிப்பதன் மூலம் கேன்சர் பாதிப்பு கூட ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

ஹேர் டை உபயோகிக்கும் முன்னர் அது உங்களுக்கு அலர்ஜியை ஏற்படுத்துமா இல்லையா என்பது குறித்து சோதனை செய்து கொள்வது முக்கியம். ஒரு சிறிய பகுதிக்கு மட்டும் டை செய்து சிறிது நேரம் காத்திருந்து உங்களுக்கு அரிப்பு, தடிப்பு போன்ற ஏதேனும் அலர்ஜி ஏற்படுகிறதா என்பதை கவனிக்க வேண்டியது அவசியம்.

ஹேர் டையில் உள்ள ஆபத்தை ஏற்படுத்தும் கெமிக்கல்கள் ஆண்கள் மற்றும் பெண்களின் கருவுறும் தன்மையை கூட பாதிக்க வாய்ப்புகள் உள்ளது.

நீங்கள் அடிக்கடி ஹேர் கலரிங் மற்றும் ஹேர் டை போன்றவற்றை உபயோகித்து கொண்டிருந்தால் முடியின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். முடி வலுவிழந்து காணப்படும்.