ஹா ஹா.... நினைக்கும் போதே நா ஊறுதே...மாங்காய் நசுக்குவது எப்படி..?

மாங்காய் என்றால் யாருக்குதான் பிடிக்காது.சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை எல்லோருக்குமே பிடித்த ஒன்று என்றால், அது மாங்காய்தான்.
மாங்காய் ஊறுகாய் முதல் மாம்பழம் வரை எல்லாமே நம் நாவிற்கு சுவை கொடுக்க கூடிய ஒன்றாக உள்ளது .
அதுவும் கோடை காலத்தில், கூழ்  கஞ்சி, பழைய  சாதம்  என  அனைத்திற்கும் மாங்காய்  ஊறுகாயை பயன்படுத்திக்கொள்வோம்.

 இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், மாங்காயை, அம்மி கல்லில் வைத்து நசுக்கி  சாப்பிடுவது என்றால் என்னவென்று தெரியுமா ?
மாங்காய் நசுக்குவது எப்படி ?
மாங்காய் துண்டுகள்
தேவையான அளவு உப்பு
மிளகாய் போதுமான அளவு
செய்முறை
நம் வீட்டில் உள்ள அம்மிகல்லில், மிளகாய் மற்றும் உப்பு வைத்து, நன்கு  அரைத்து, பின்னர்  மாங்காய் துண்டுகளை  அதில் வைத்து ,அம்மிக்கல்லால் அதனை   நசுக்கவும்.பின்னர்  நசுக்கிய மாங்காயை எடுத்து தனியாக ஒரு கப்பில்  எடுத்துகொள்ளுங்கள்
இதனை  பழைய சாதம், மோர் தயிர் சாதம் உள்ளிட்ட  அனைத்திற்கும்  சைடிஷ் ஆக பயன்படுத்திக்கொள்ளாம்.

– Maya Loham