சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவில் இருந்து பிரிக்கப்பட்ட வங்க தேசத்தில் தொடர்ந்து இந்து சமூகத்தினர் மீது தாக்குதல் நடத்தப்படுவதை கண்டித்து பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் பேரணி நடைபெற்றது. இதில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

சிறுபான்மையான இந்து மக்கள் மீது தாக்குதல்களும், வீடுகள் சூறையாடப்படுவது, கோவில்கள் சேதப்படுத்தப்படுவது தொடர்ந்து வருகிறது.

இது தொடர்பாக வங்காளதேச உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கான், செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது,

நாட்டில் அராஜகம் மூலம் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அவர்களுக்கு தண்டனை பெற்று தருவதில் அரசு உறுதியாக உள்ளது. சமூக ஊடகங்களில் மதம் குறித்து அவதூறு கருத்துக்களை கட்டுப்படுத்த அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்துள்ளது.


இந்து சமூகத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்". என்று வங்காளதேச உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கான் தெரிவித்துள்ளார்.

- Maya Lohan