தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர். அவர் கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு உச்ச நட்சத்திரமாக கொடிகட்டி பறக்கும் தளபதி விஜய்யின் தந்தையும் ஆவார்.
எஸ்.ஏ சந்திரசேகர் நீண்ட காலங்களுக்கு பிறகு சமுத்திரக்கனி நடிப்பில் நான் கடவுள் இல்லை என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் சண்டை பயிற்சி இயக்குனர் கனல் கண்ணன் தற்பொழுது படப்பிடிப்பு தளத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் அந்தரத்தில் தொங்கியபடி இருக்கும் காட்சியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதனைக் கண்ட ரசிகர்கள் இந்த வயசிலும் இவ்வளவு டெடிகேஷனா! தளபதிக்கே அப்பாவாச்சே என பாராட்டி வருகின்றனர்.
0 Comments
கருத்துரையிடுக