
நமக்கு சப்பாத்தியின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி முழுதாக தெரியவில்லை. கோதுமை நமது உடலுக்கு நல்லது என்பதை மட்டுமே பெரும்பாலோனர் தெரிந்து வைத்திருக்கின்றனர். சப்பாத்தியில் குறைந்த அளவு மட்டுமே கொழுப்பு உள்ளதால், இது கார்டிவாஸ்குலர் நோய்க்கான அபாயத்தை குறைக்கிறது.
கோதுமையில் விட்டமின் பி மற்றும் இ, காப்பர், மங்கனிசு, சிலிக்கான், சல்பர், பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம், மினரல், உப்பு மற்றும் சில சத்துக்கள் உள்ளன.
இதில் அதிகளவு ஊட்டச்சத்து உள்ளதன் காரணமாகவே, உடல் எடை அதிகரிப்பு, மினரல் குறைபாடு, அனிமியா, மார்பக புற்றுநோய் மற்றும் சில கர்ப கால பிரச்சனைகளுக்கு டயட்டில் சப்பாத்தியை சேர்த்துக்கொள்ள சொல்கிறார்கள்.
முழு தானிய உணவுகளில் கார்போஹைற்றைட் அதிகமாக உள்ளது. சர்க்கரை நோயாளிகள் இதனை சாப்பிடலாம். உடல் எடையை குறைக்கவோ அல்லது சரியான உடல் எடையை பராமரிக்கவோ நீங்கள் சப்பாத்தியை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
ரொட்டி உங்களது உடலுக்கு தேவையான விட்டமின்கள், மினரல்கள், மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து ஆகியவை அடங்கியுள்ளன.
சப்பாத்தியில் ஜிங்க் மற்றும் பல மினரல்கள் உள்ளன. இவை உங்களது சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது சப்பாத்தியின் ஆரோக்கிய நன்மைகளில் ஒன்றாகும்.
ரொட்டி எளிதில் செரிமானமாக கூடியது. எனவே நீங்கள் சாப்பாட்டிற்கு பதிலாக ரொட்டி சாப்பிடலாம். இது ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
சப்பாத்தியில் அதிகளவு இரும்புச்சத்து உள்ளது. இது உங்களது இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்ய உதவுகிறது.
நீங்கள் எண்ணெய் மற்றும் வெண்ணையை சப்பாத்தியில் சேர்த்து செய்யாமல் இருந்தால், இதில் மிககுறைந்த கலோரிகள் தான் இருக்கும். இது உங்களது உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இது கோதுமை சப்பாத்தியின் மிக முக்கிய ஆரோக்கிய நன்மையாகும். இது மலச்சிக்கலில் இருந்து உங்களை பாதுகாக்க உதவுகிறது. மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் இந்த சப்பாத்தியை சாப்பிடுவது மிகவும் நல்லது.
சப்பாத்தியில் உள்ள நார்ச்சத்து மற்றும் செலினியம் ஆகியவை சில வகையான கேன்சர்கள் நம்மை தாக்குவதற்கான அபாயத்திலிருந்து நம்மை பாதுகாக்கின்றன.
0 Comments
கருத்துரையிடுக